இந்தி நடிகர் சுசாந்த் சிங் தொடர்பான போதைப் பொருள் விவகார வழக்கில் மேலும் பல இந்தி திரை நட்சத்திரங்களை தனது கண்காணிப்பு வளையத்துக்குள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் தயாரிப்பாளர் கரண் ஜோகரிடம் பணியாற்றி வரும் சிதிஜ் பிரசாத் என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து கைப்பற்ற ஆவணங்கள், வாட்ஸ் அப் சேட்டிங்குகளில் மேலும் சில இந்தி திரையுலக நட்சத்திரங்களுக்கும் போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்மன் அனுப்பி விசாரிக்கும் முன்பு, தனது கண்காணிப்பு வளையத்துக்குள் அவர்களை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.