இந்திய ராணுவத்தில் உள்ள சீட்டா மற்றும் சேடக் வகை ஹெலிகாப்டர்கள் பழமையாகி விட்டதால் அவற்றை மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மூத்த அதிகாரி ஒருவர், இந்திய ராணுவம், விமானம் மற்றும் கப்பல் படைகளில் 187 சேடக் மற்றும் 205 சீட்டா வகை ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த ஹெலிகாப்டர்களில் பெரும்பாலானவை 40 ஆண்டுகளுக்கு முந்தையவை எனக் குறிப்பிட்ட அவர், இவற்றை மாற்ற வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
லடாக் பிரச்னையில் சீனாவுடன் ஏற்பட்டுள்ள மோதலைச் சுட்டிக் காட்டியுள்ள அவர், இந்தச் சூழலில் புதிய இலகுரக ஹெலிகாப்டர்கள் வாங்கவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.