ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தியை விடுவிக்கக் கோரி, அவரது மகள் தாக்கல் செய்த மனு 7 மாதங்கள் கழித்து உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
அந்த வகையில், வீட்டுக் காவலில் உள்ள மெஹ்பா முப்தியை விடுவிக்கக் கோரி அவரது மகள் இல்திஜா முப்தி கடந்த மார்ச் மாதம் மனுத் தாக்கல் செய்தார்.
கொரோனா பரவல் காரணமாக அந்த மனு விசாரிக்கப்படாமல் இருந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது.