ஜம்மு -காஷ்மீரின் சம்பூரா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் இ தொய்பா கமாண்டர் உள்ளிட்ட 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
புல்வாமா மாவட்டம் சம்பூரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சிஆர்பிஎப், இந்திய ராணுவம் மற்றும் போலீசார் ஞாயிற்றுக்கிழமை இரவு கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது இருதரப்புக்கும் மூண்ட சண்டை இரவு முழுவதும் நீடித்தது. சண்டை முடிவுக்கு வந்ததையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 ஏகே ரக ரைபிள் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.