மத்தியப் பிரதேசத்தில் கூடுதல் டிஜிபியான புருசோத்தம் சர்மா அவர் மனைவியைத் தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியானதை அடுத்து அவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் டிஜிபி புருசோத்தம் சர்மா வீட்டில் அவர் மனைவியைத் தாக்கும் காட்சிகள் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து அவரைப் பதவியில் இருந்து விடுவித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.