சீன அரசு வங்கிகளிடம் இருந்து பெற்ற சுமார் 5180 கோடி கடன் தொடர்பான வழக்கில், ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார் என்ற நீதிபதியின் குற்றச்சாட்டை அனில் அம்பானி மறுத்துள்ளார்.
லண்டனில் சீன வங்கிகள் தொடர்ந்த வழக்கில், காணொலி வாயிலாக மும்பையில் இருந்து ஆஜரான அவர், தாம் ஒரு சைவ உணவர் என்றும் மது, புகை என எந்த பழக்கமும் தமக்கு இல்லை எனவும் கூறினார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு அனில் அம்பானியின் தனிப்பட்ட உத்தரவாதத்தின் அடிப்படையில் கடன் வழங்கியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், கடனை திருப்பிச் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை அவர் எந்த தொகையும் செலுத்தவில்லை.
தமக்கு சொந்தமானதாக கூறப்படும் சொத்துக்கள் அனைத்தும் குடும்பத்தினருக்கு சொந்தமானவை எனவும் அவர் பதிலளித்துள்ளார்.