அரபிக் கடல் பகுதியில் இந்திய ஜப்பானிய கடற்படையினர் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜிமெக்ஸ் 20 என்றழைக்கப்படும் இந்த போர் ஒத்திகைப் பயிற்சி கடந்த சனிக்கிழமை தொடங்கி நேற்றும் தொடர்ச்சியாக நடைபெற்றது.
இரு நாட்டு கடற்படை போர்க்கப்பல்களும் இதில் பங்கேற்றன. இந்தியாவின் சென்னை தர்க்காஷ், தீபக் உள்ளிட்ட போர்க்கப்பல்களுடன் ஜப்பானின் இகாசுச்சி மற்றும் காகா போர்க்கப்பல்கள் மூன்று நாள் பயிற்சியில் ஈடுபடுகின்றன.
இன்றுடன் இந்த பயிற்சி நிறைவு பெறுகிறது.