பெயரில்லாமல் வரும் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று அனைத்து அரசு துறைகளுக்கும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் ஊழல் புகார்களை விசாரிப்பது தொடர்பாக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை அனைத்து ஊழல் கண்காணிப்பு தலைமை மற்றும் நிர்வாக அதிகாரிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த வழிகாட்டுதல்களை மீறியது தெரிய வந்தால், அதுகுறித்து தீவிரமாக கவனத்தில் கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.