போலீசார் தன் வீட்டில் எடுத்த போதை பொருள் ரியா சக்ரபோர்த்திக்கு சொந்தமானது என நடிகை ரகுல்பிரீத்சிங் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தி நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் அவருயை தோழியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், நடிகைகள் தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர்,
ரகுல் பிரீத்சிங், சாரா அலிகான், ஆகியோரிடம் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக ரகுல்பிரீத்சிங் வீட்டில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து நடைபெற்ற விசாரணை குறித்து அதிகாரிகள் கூறுகையில், தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு சொந்தமானது என ரகுல் பிரீத்சிங் ஒப்புக்கொண்டதாக கூறி உள்ளனர். இதனிடையே நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.