கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு சார்பில் இந்த ஆண்டு நவராத்திரி விழா நடத்தப்பட மாட்டாது என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.
அக்டோபர் 17 முதல் 25ம் தேதி வரை குஜராத் அரசு சார்பில் விழா நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2019ம்ஆண்டு நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் குஜராத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, நவராத்திரி விழாவை இந்த ஆண்டு நடத்துவதில்லை என்று முடிவெடுத்து இருப்பதாக முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையிலான குஜராத் அரசு அறிவித்துள்ளது.