கொரோனா தடுப்பு மருந்தை விலை கொடுத்து வாங்க இயலாத ஏழைகளுக்கு அதனை இலவசமாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை சில மூத்த அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
தடுப்பு மருந்து ஒரு டோஸ் சில்லறை வர்த்தகத்தில் 140 முதல் 210 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகளில் மத்திய சுகாதார அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
மருந்தை விநியோகம் செய்வதற்கான விரிவான திட்டம் ஒன்றும் வகுக்கப்பட்டுள்ளது.