பாஜகவின் மிகவும் பழைய கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
அக்கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அகாலி தளத்தின் மூத்த நிர்வாகிகள் அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதலுடன் நேற்று மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாதல், அகாலி தளம் இனியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்க முடியாது என்று தெரிவித்தார்.