நாட்டிலேயே முதல் மாநிலமாக அக்டோபர் 1ம் தேதி முதல், கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க, மேற்கு வங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், இயல்பு நிலைக்கு திரும்பும் நோக்கில், திருவிழாக்கள், இசை, நடனம் மற்றும் மேஜிக் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளோடு விளையாட்டு நிலையங்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம், திரையரங்குகள் மற்றும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மிகாமல் பங்கேற்பதோடு, மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்களை பின்பற்றவும், மம்தா அரசு வலியுறுத்தி உள்ளது.