நாட்டின், புதிய, பாதுகாப்பு தளவாட உற்பத்தி மற்றும் கொள்வனவு கொள்கையை, அடுத்த 5 நாட்களுக்குள், மத்திய அரசு இறுதி செய்யும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசின் கொள்கையளவிலான சீர்திருத்தங்களில் மிக முக்கியமானதாகவும், ஆகப்பெரிய ஒன்றாகவும், அது விளங்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். பாதுகாப்புத்துறையில், நேரடி அந்நிய முதலீட்டை, 74 விழுக்காடு வரையில், மோடி அரசு அனுமதித்திருப்பதாகவும், ராஜ்நாத்சிங் தெரிவித்திருக்கிறார்.