இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைய, நாட்டின் வலுவான சுகாதார அமைப்புதான் காரணம் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன் கூறி உள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற எய்ம்ஸ் மருத்துவமனை 65-வது ஆண்டு விழாவில் பேசிய அவர், கொரோனா வைரஸ் மீட்பு விகிதம் அதிகரித்து வருகிறது, இறப்புவிகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது என்றார். இது அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பின்பற்றி வரும் கட்டுப்பாட்டு உத்தியின் வெற்றியை நிருபித்து காட்டுவதாக அவர் கூறினார்.
நாட்டில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இறப்பு விகிதத்தை குறைப்பதில் மிகுந்த செயல்திறனை காட்டி வருவதாக அவர் தெரிவித்தார். விரைவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா சாதித்துக்காட்டும் என்று அவர் கூறினார்.