காரிப் பருவத்தில் மழையால் பயிர்கள் சேதமடைந்ததால் வெங்காய விளைச்சல் 9 லட்சம் டன் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
காரிப் பருவ வெங்காயம் ஜூலை ஆகஸ்டு காலக்கட்டத்தில் விதைத்து அக்டோபர் முதல் டிசம்பர் வரை அறுவடை செய்யப்படும். மகாராஷ்டிரத்தில் கனமழையால் வெங்காயப் பயிர்கள் சேதமடைந்ததால் இந்த ஆண்டின் காரிப் பருவத்தில் விளைச்சலில் 9 லட்சம் டன் அளவுக்கு வீழ்ச்சி ஏற்படும் என மராத்தி நாளிதழான சகல் தெரிவித்துள்ளது.
இதேபோல் தக்காளி விளைச்சலில் 29 ஆயிரம் டன்களும், உருளைக் கிழங்கு விளைச்சலில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் டன்களும் வீழ்ச்சி ஏற்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலன் அமைச்சகம் கணித்துள்ளது.
விளைச்சல் குறையும் என்கிற கணிப்பால் அனைத்து வகை வெங்காயங்களின் ஏற்றுமதிக்கும் செப்டம்பர் 14 முதல் அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத் தக்கது.