இந்தி நடிகை கங்கனா ரணாவத்தின் திரைப்பட தயாரிப்பு நிறுவன கட்டிடத்தை சட்டவிரோதமாக கட்டியதாக குற்றம்சாட்டி இடித்தது போல பிற விவகாரங்களிலும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா என மும்பை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
பாந்த்ராவிலுள்ள திரைப்பட தயாரிப்பு நிறுவன கட்டிடம் இடிக்கப்பட்டதில், மாநகராட்சியிடம் 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு கங்கனா தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநகராட்சிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், மேலும் சில இடங்களில் சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படும் நிலையில், அங்கும் இதேபோல விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வியெழுப்பினர்.