வோடபோன் வரி வழக்கில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2007ஆம் ஆண்டு ஹட்சிசன் எஸ்ஸார் நிறுவனத்தை வோடபோன் கையகப்படுத்தியதற்கு 7900 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என அரசு தெரிவித்தது.
இந்த வழக்கில் 2012ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வோடபோனுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது.
இதையடுத்து மறைமுகப் பங்குப் பரிமாற்றத்தால் கிடைக்கும் முதலின ஆதாயத்துக்கும் வரி செலுத்த வேண்டும் எனச் சட்டத்தைத் திருத்தி வோடபோனிடம் மீண்டும் தொகையைச் செலுத்தும்படி அரசு கோரியது.
இந்திய அரசின் செயல், இந்தியா - நெதர்லாந்து இடையிலான முதலீட்டு உடன்பாட்டுக்கு எதிரானது என சிங்கப்பூரில் உள்ள பன்னாட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டதுடன், ,வோடபோன் 20 ஆயிரம் கோடி ரூபாயைச் செலுத்த வேண்டியதில்லை எனத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.