காஷ்மீரில் வன்முறை அதிகரித்து இந்தியாவுக்கு தொல்லை கொடுக்குமாறு பாகிஸ்தானை சீனா கேட்டுக் கொண்டுள்ளதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய உளவுத்துறை அதிகாரி, லடாக் பகுதியில் மத்திய அரசு எடுத்துள்ள கடுமையான நிலைப்பாடு காரணமாக பாகிஸ்தானுக்கு சீனா பல்வேறு வழிகளிலும் உதவி செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் காஷ்மீர் பகுதியில் தீவிரவாதத்தை அதிகப்படுத்த பாகிஸ்தானை, சீனா கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அண்மையில் காஷ்மீர் பகுதியில் சீனாவின் ட்ரோன்களும், சீன ஆயுதங்களும் கைப்பற்றப்படுவதை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.