இந்திய போலீஸ் அதிகாரிகளுக்கு இஸ்ரேல் பயிற்சி வழங்குவதற்கு தடை கேட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், காஷ்மீரில் மனித உரிமை மீறலில் ஈடுபடும் இந்திய போலீசாருக்கு இஸ்ரேல் பயிற்சியளிப்பது சட்டவிரோதம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்திய அதிகாரிகள் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களுக்கு பயிற்சி வழங்குவரை நியாயப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு மீதான விசாரணை விரைவில் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.