பீகார் சட்டப்பேரவை தேர்தலில் கொரோனா முன்னெச்சரிக்கையாக பின்பற்றப்பட வேண்டிய, வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
அதன்படி, வேட்பு மனுத்தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், ஆன்லைனில் மனுத்தாக்கல் செய்வதோடு, முதல்முறையாக டெபாசிட் பணத்தை செலுத்தவும் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணியாளர்கள், வாக்காளர்கள் என அனைவரும் மாஸ்க் அணியவும், சானிடைசர், வெப்பநிலை மானி போன்றவற்றை கட்டாயம் பயன்படுத்தவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. பீகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.