போதைப் பொருள் விவகாரம் தொடர்பான விசாரணையில் நடிகை தீபிகா படுகோனே ஆஜராகையில், தாமும் அங்குவர அனுமதிக்க வேண்டுமென அவருடைய கணவரும், நடிகருமான ரன்வீர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மும்பையில் நாளை நடைபெறும் விசாரணையில் நேரில் ஆஜராகக்கோரி தீபிகாக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்காக மும்பைக்கு தீபிகா வந்துள்ள நிலையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ரன்வீர் சிங் அளித்துள்ள மனுவில், தீபிகா படுகோனே பதற்றம் அடைய வாய்ப்பு உள்ளதால் விசாரணையின் போது அவருடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.