பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று மதியம் வெளியிட இருக்கிறது.
243 இடங்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் தற்போதைய பதவிக்காலம் நவம்பர் 29ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இதையடுத்து சட்டப்பேரவைக்கு எந்நேரமும் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் இன்று மதியம் 12.30 மணிக்கு 3 தேர்தல் ஆணையர்களும் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர்.
அப்போது பீகார் தேர்தல், பிற மாநிலங்களில் காலியாக இருக்கும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடவுள்ளனர்.