கொரோனாவை வீட்டுக்குள் லாக் டவுன் செய்து பூட்டி வைத்துவிட்டு, வீதிகளில் துர்க்கை பூஜையைக் கொண்டாடுவோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் சுமார் 2500 துர்க்கை பூஜைகளும் மாநிலம் முழுவதும் 37 ஆயிரம் பூஜைகளும் நடைபெற உள்ளன. மக்கள் திரளாகக் கூடும் துர்க்கை பூஜை திருவிழாக்களை பாதுகாப்பாக நடத்துவது எப்படி என்று அதிகாரிகளுடன் மமதா பானர்ஜி ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தை தவிர்த்து துர்கா பூஜையைக் கொண்டாடுவோம் என்று அப்போது மமதா பானர்ஜி தெரிவித்தார். பூஜை கமிட்டிகளைச் சேர்ந்த 81 ஆயிரம் சிறுவியாபாரிகளுக்கு 2000 ரூபாய் உதவித் தொகை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.