சீனா ராணுவ உயரதிகாரிகளுடன் அடுத்த 7 வது சுற்று பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில் களத்தில் தனது நிலையை உறுதி செய்துக் கொண்டது இந்தியா.
இந்திய விமானப் படையின் சுகோய், மிக் உள்ளிட்ட போர் விமானங்கள் எல்லையில் ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகின்றன. எல்லையில் தனது படையை இந்தியா பலப்படுத்திக் கொண்டுள்ளது.
படைபலம் குறைவாக உள்ள இடங்களை படைகளை அனுப்பி பலப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை 14 மணி நேரம் நீடித்த போதும் படைகளை விலக்கிக் கொள்ள சீனா ஒப்புதல் அளிக்கவில்லை. முன்களத்திற்கு கூடுதல் படைகளை அனுப்பக்கூடாது என்று இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளன.