பெங்களூர் கலவரம் தொடர்பான வழக்கில் நேற்று 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த கலவரத்தில் முக்கிய சதிகாரர் என்று கருதப்படும் வங்கி ஏஜன்ட்டான 44 வயதுடைய அலி என்ற நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் சமூகவலைதளங்களில் வெளியிட்ட பதிவைத் தொடர்ந்து கடந்த மாதம் 11ம் தேதி பெங்களூரில் கலவரம் மூண்டது . போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர்.