அமெரிக்காவை சேர்ந்த ஹார்லே டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம், இந்தியாவில் இருந்து வெளியேறுவது உள்ளிட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைக்காக கூடுதலாக ஏழரை கோடி டாலர் செலவாகும் என்று தெரிவித்துள்ளது.
விற்பனை குறைவாக நடைபெறும் நாடுகளில் இருந்து வெளியேற இருப்பதாகவும், அமெரிக்கா போன்ற முக்கிய சந்தையில் கவனம் செலுத்த இருப்பதாகவும், அந்த நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
அந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இந்தியாவில் நடைபெறுகிறது. எனவே இந்தியாவில் விற்பனை மற்றும் உற்பத்தியை நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.
இதற்கான மொத்த செலவு 17 கோடி டாலராக இருக்கும் என்று அந்த நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.