சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம், மங்களூரு, மைசூரு நகரங்களுக்கு வரும் 27 ஆம் தேதி இருமார்க்கத்திலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளாக இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன. எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வரும் 27 ஆம் தேதி முதல் திருவனந்தபுரம் செல்லும் ரயில் இரவு 7.45 மணிக்கு புறப்படும். சேலம், ஈரோடு, கோவை வழியாக அந்த ரயில் செல்லும்.
மைசூரு செல்லும் சிறப்பு ரயில் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு வழியாக செல்லும். மங்களூரு செல்லும் ரயில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறு மார்க்கத்தில் வரும் 28 ஆம் தேதி முதல் தினசரி ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.