கேரள தங்க கடத்தல் வழக்கில், முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கர், முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சொப்னா சுரேஷ் இருவரிடமும் கொச்சியில் என்ஐஏ அதிகாரிகள் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தினர்.
மூன்றாவது தடவையாக இந்த இருவரிடமும் நடந்த விசாரணையில், சிவசங்கரிடம் தங்க கடத்தல் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னர் அவர் அளித்த பதில்களில் இருக்கும் முரண்பாடுகள் குறித்தும் அவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
தங்க கடத்தல் வழக்கில் முதன்முறையாக சிவசங்கரும், சொப்னா சுரேஷும் சேர்ந்து என்ஐஏ விசாரணையை சந்தித்துள்ளனர்.