காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை எதிர்க்கட்சியினர் சந்தித்து வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் குடியரசுத் தலைவரை சந்தித்து எதிர்க்கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.மசோதாக்கள் மீது முறையாக வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும் ஜனநாயக மரபுகள் கடைபிடிக்கப்படவில்லை என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.