ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற போது மரபுகளைப் பின்பற்றவில்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது.
கிறித்துவ வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவரான ஜெகன் மோகன், பெருமாள் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளதாக உறுதி மொழி எழுதித் தரவேண்டிய மரபை நிறைவேற்றவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கு பாஜக , காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. கோவில் மரபுகளை ஜெகன்மோகன் கடைபிடிக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் வலியுறுத்தியுள்ளார்.