டைம் பத்திரிகையின் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்கள் பட்டியலில், பிரதமர் மோடி, சுந்தர் பிச்சை, ஆயுஷ்மான் குரானா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
நடப்பாண்டிற்கான பட்டியலில் இந்தியாவில் இருந்து இடம்பிடித்த ஒரே அரசியல் கட்சிப் பிரமுகர் மோடி மட்டுமே.
சிஏஏ-விற்கு எதிரான ஷாஹீன்பாக் போராட்டத்தில் ஈடுபட்ட 82 வயது மூதாட்டி பில்கிஸ், பிரிட்டனில் எய்ட்ஸ் நோயாளியை குணமாக்க முக்கிய பங்காற்றிய டாக்டர் ரவீந்திர குப்தா ஆகியோரும், சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.