மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில் மாநிலங்களவையில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
மாநிலங்களவையில் பேசிய அவர், ‘திட்டமிட்ட அமர்வுக்கு முன்னதாக மாநிலங்களவை கூட்டத்தொடர் முடிவடைந்துள்ளது என்றார். மொத்தம் உள்ள 10 அமர்வுகளில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், 6 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமளி காரணமாக 3.15 மணி நேரம் வீணடிக்கப்பட்டது என்றும்,அவையின் மொத்த அலுவல் நேரத்தின் 57% நேரம் செலவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.