சட்ட விரோதமாக இந்தியாவின் மூன்று பகுதிகளை இணைத்து வெளியிட்ட புதிய தேசிய வரைபட பாடப் புத்தகங்கள் விநியோகத்தை நிறுத்தி வைக்க நேபாள அரசு, உத்தரவிட்டுள்ளது.
அந்நாட்டு அரசு, உத்தரகண்டின், கலபானி, லிபுலேக், லிம்பியாதுரா பகுதிகளை இணைத்து, திருத்தப்பட்ட புதிய தேசிய வரைபடத்தை வெளியிட்டது.
9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு, புதிய வரைபடத்துடன், பாடப் புத்தகத்தை, கல்வி அமைச்சர், கிரிராஜ் மணி பொக்ரியால், வெளியிட்டார். இந்நிலையில் நேபாள அமைச்சரவைக் கூட்டத்தில், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை விநியோகிக்க வேண்டாம் என, முடிவு செய்யப்பட்டது. இது குறித்து பேசிய அரசின் செய்தி தொடர்பாளர், ஜனக் ராஜ் ஜோஷி, நேபாளத்தின் பூகோளப் பகுதியை மாற்ற, கல்வி அமைச்சகத்திற்கு அதிகாரமில்லை என்றார்.
மேலும், புத்தகத்தில் தவறுகள் உள்ளதால், விநியோகம் நிறுத்தி வைக்கப்படுவதாக அவர் கூறினார்.