பிட் இந்தியா இயக்கம் (Fit India Movement)) தொடங்கப்பட்டு ஓராண்டு ஆவதையொட்டி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, திரைப்பட நடிகர் மிலிந்த் சோமன் உள்ளிட்டோருடன் வியாழக்கிழமை (நாளை-செப்.24) காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாடவுள்ளார்.
உடல்நலனை பராமரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடியின் யோசனையின் பெயரில் அத்திட்டம் தொடங்கப்பட்டது.
இதன் முதலாமாண்டு தினத்தையொட்டி, விராட் கோலி, மிலிந்த் சோமன், ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் உள்ளிட்டோருடன் காணொலி வாயிலாக மோடி உரையாட உள்ளதாக பிரதமர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.