என்ஜிஓக்கள் எனப்படும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தொடர்பான, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
என்ஜிஓக்கள் தங்களுக்கு வரும் மொத்த வெளிநாட்டு நிதியில் 20 சதவீதத்திற்கு மேல் நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்தக் கூடாது,அடையாளச் சான்றிதழாக ஆதார் எண் கட்டாயம் அளிக்க வேண்டும்.
பிரத்யேக எப்சிஆர்ஏ வங்கி கணக்குகளில் மட்டுமே வெளிநாட்டு நிதியைப் பெற வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் வெளிநாட்டு நிதிகள் ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதை உறுதி செய்வதே இந்த சட்ட திருத்தத்தின் நோக்கம் ஆகும்.
மக்களவையில் கடந்த 21ம் தேதி நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது.