மும்பை அருகே 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது.
பிவான்டி பகுதியில் இருந்த மிகவும் பழைமையான அக்கட்டிடம் திங்கள்கிழமை அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் உடனடியாக 10 பேர் சடலங்களாகவும், 39 பேர் காயத்துடனும் உடனடியாக மீட்கப்பட்டனர்.
தையடுத்து நடைபெற்ற மீட்புப் பணியில் மேலும் 25 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 35ஆக அதிகரித்த நிலையில், இன்று மேலும் 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
மும்பை உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மீட்பு பணி நடைபெறும் பிவான்டியிலும் மழை பெய்கிறது. அந்த மழைக்கு மத்தியிலும் மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.