டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகப் போவதாக அதன் முன்னாள் தலைவரான சைரஸ் மிஸ்திரியின் குடும்பம் அறிவித்துள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தில் இந்த குடும்பத்தினருக்கு 18.4 சதவிகித பங்குகள் உள்ளன. 2016ல் டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்ட பிறகு, பல்வேறு உரசல்களால் கடந்த 4 ஆண்டுகளாக இரு தரப்பிற்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்குகள் நடக்கின்றன.
இந்த நிலையில் வெளியேறும் முடிவை எடுத்துள்ள மிஸ்திரி குடும்பம் தங்களது பங்கு மதிப்பு ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடி என கூறினாலும், டாடா நிறுவன சார்ட்டர்ட் அக்கவுண்ட்கள் அவற்றின் மதிப்பு 58000 கோடி மட்டுமே என கூறுவதாலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.