மாலத்தீவுகள், மொரீஷியஸ், நேபாளம், ஹாங்காங் உள்ளிட்ட 16 நாடுகள் விசா இல்லாமல் இந்தியர்களை அனுமதிப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
எழுத்துபூர்வமான பதில் ஒன்றில் இதைத் தெரிவித்த வெளியுறவு இணை அமைச்சர் முரளீதரன், ஈரான், இந்தோனேசியா உள்ளிட்ட 43 நாடுகள் விமான நிலைய விசாக்களையும், இலங்கை, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட 36 நாட்கள் இ-விசாக்களை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
விசா இல்லாமல் பயணம் செய்யும் நாடுகள் மற்றும் விமான நிலைய விசாக்கள் - இ விசா வழங்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.