ஜார்க்கண்டில் கோலோபிரா பகுதியில் பில்லி சூனியம் வைத்து, சிறுவன் ஒருவன் உயிரிழக்க காரணமாக இருந்ததாகக் கூறி, 55 வயது பெண்ணின் தலைமுடியை மழித்து ஊரார் மொட்டையடித்தனர்.
மொட்டையடிக்கப்பட்ட பெண்ணை ஊர்வலமாகவும் அழைத்துச் சென்றனர். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் ஊர் மக்களின் எதிர்ப்பை மீறி 9 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பில்லி-சூனியக் கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.