காவிரி உள்பட நாட்டில் ஒடும் 5 முக்கிய நதிகளை தூய்மைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் நடந்த இணையவழி கருத்தரங்கு ஒன்றில் பேசிய மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் பிரிவான கங்கை நதி தூய்மை திட்டத்தின் தலைமை இயக்குநர் ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா, பெரியாறு, காவிரி, கோதாவரி, மகாநதி, நர்மதை ஆகிய 5 நதிகளின் நீர்வளம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்த நதிகளே நாட்டில் அதிக நிலப்பரப்பை கடந்து செல்வதாக கூறிய அவர், அந்த நதிகளைச் சார்ந்த பல்லுயிர் பெருக்கம், கரையோர நகரங்கள், தற்போதைய மாசு அளவு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.