டெல்லியில் தமது அறைக்குள் அத்துமீறி புகுந்த 3 பேர், புலனாய்வுத் துறையினர் எனத் தெரிவித்து விசாரணை நடத்த முயன்றதாக வேலூர் தொகுதி திமுக எம்பி கதிர் ஆனந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவையில் இன்று பேசிய அவர், பழைய தமிழ்நாடு இல்லத்தில் உள்ள அறையில் மதியம் 1.45 மணியளவில் புகுந்த 3 பேர், நாடாளுமன்றத்தில் திமுக எப்படி செயல்பட போகிறது என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நிலவும் உள்ளூர் பிரச்னையில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதையும் அவர்கள் கேட்டதாக தெரிவித்தார்.