டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட உமர் காலித் தனது குடும்பத்தினரைச் சந்திக்கக் கோரியை மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் தொடர்புள்ளதாகக் கூறி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது காவல்துறை காவலில் உள்ள அவர், விசாரணையின் போது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என கர்கார்டூமா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமிதாப் ராவத் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.