கொரோனா பாதிப்பு முடிந்தாலும் 2 கோடி சிறுமிகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என்று நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் பெண் மலாலா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பாதிப்பால் பெண்கள் கல்வி கற்பதை மேம்படுத்தும் கூட்டு முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.
நோய்த் தொற்று பாதிப்பு முடிவடைந்த பின்னரும் 2 கோடிக்கும் மேற்பட்ட சிறுமிகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படலாம் என்றும் மலாலா கவலை தெரிவித்தார்.