செப்டம்பர் மாதத்தில் ரயில் சரக்குப் போக்குவரத்து கடந்த ஆண்டைவிட 13 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கொரோனா சூழலில் சாலைப் போக்குவரத்துக்குப் பல்வேறு தடைகள் இருந்த நிலையில் சரக்கு ரயில்களில் எரிபொருட்கள், இன்றியமையாப் பொருட்கள் ஆகியன கொண்டுசெல்லப்பட்டன.
இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் 20 நாட்களில் உள்ள சரக்குப் போக்குவரத்து கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட 13 விழுக்காடு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு தானியங்கள், மோட்டார் வாகனங்கள், மருந்துகள் ஆகியவற்றை ஏற்றிச்சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சகம், டிராக்டர்களை ரயிலில் ஏற்றிக் கொண்டு சென்ற காட்சியை வெளியிட்டுள்ளது.