இந்தியாவில் கொரோனா தடுப்புக்கான 4 மருந்துகளின் மருத்துவச் சோதனைகள் அடுத்தடுத்த கட்டத்தை அடைந்துள்ளதாக மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பேசிய அவர், கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருவதாகத் தெரிவித்தார். 30 மருந்துகளைத் தயாரிக்க உதவி வரும் நிலையில், 3 மருந்துகள் சோதனையின் முதல், இரண்டாம், மூன்றாம் கட்டங்களுக்கு முன்னேறியுள்ளதாகத் தெரிவித்தார்.
நான்குக்கு மேற்பட்ட மருந்துகள் மருத்துவ சோதனைக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாரத் பயோடெக், சைடஸ் கடிலா ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்து சோதனைகளின் முன்னேற்றத்தை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.