கடந்த 5 ஆண்டுகளில் வங்கதேசத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு உள்துறை இணையமைச்சர் நித்யானத் ராய் எழுத்துமூலமாக அளித்த பதிலில், சந்தேகத்திற்குரிய நபர்கள் என்ற வரிசையில் 83 ஆயிரம் பேர் அஸ்ஸாமில் உள்ள வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அல்லது தண்டனையை நிறைவு செய்த வெளிநாட்டவர்களை திருப்பி அனுப்பதற்காக தடுப்பு மையங்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் நித்யானந் ராய் தெரிவித்துள்ளார்.