ஜம்மு காஷ்மீரில் இதுவரை 10 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு குடியேற்றச் சான்று வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷண் ரெட்டி, ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அளித்த தகவல்களின்படி, மொத்தம் 21 லட்சத்து 13 ஆயிரத்து 879 பேர் வீட்டுச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், 1947 ஆம் ஆண்டு நடந்த இந்திய, பாகிஸ்தான் பிரிவினையின் போது, மொத்தம் 31 ஆயிரத்து 619 குடும்பங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும், அவர்களில் 26 ஆயிரத்து 319 குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு மீண்டும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குடியேறியதாகவும் அவர் தெரிவித்தார்.