கடந்த ஏப்ரல்- ஜூன் மாதங்களுக்கு இடையே பொதுத் துறை வங்கிகளில் 19 ஆயிரத்து 964 கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சந்திரசேகர் கெளர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், பாங்க் ஆப் இந்தியாவில் 47 மோசடிகளில் 5ஆயிரத்து 124 கோடி ரூபாய் அளவிற்கு நிதி முறைகேடு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பிற வங்கிகளில் நடைபெற்ற நிதி முறைகேடு விவரங்களையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.