ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றும் உரைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என ஐ.நா.வுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி கூறியுள்ளார். ஐ.நா. பொதுசபையின் வருடாந்திர கூட்டம் நாளை தொடங்குகிறது.
இந்த ஆண்டு ஐ.நா.வின் 75-வது ஆண்டு என்பதால் அதன் நினைவாக நாளை உயர்மட்ட கூட்டம் நடக்கிறது.
22-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை பொது சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி 26-ந்தேதி சிறப்புரை நிகழ்த்துகிறார்.
மோடியின் 2 உரைகளும் வீடியோ காட்சிகளாக ஒளிபரப்பப்படுகிறது. மோடியின் உரைகள் இரண்டும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என ஐ.நா.வுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி கூறியுள்ளார்.